பள்ளிகள் மற்றும் மோசமான சுகாதார கிளினிக்குகளை சீரமைத்தல் போன்ற சிறிய திட்டங்களை மெதுவாக செயல்படுத்தப்படுவதில் அதிருப்தி தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதனை விரைவுப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைத்து ஏழைப் பள்ளிகளும் கிளினிக்குகளும் மறு சீரமைப்பு செய்து முடிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவை இன்னும் முழுமைப் பெறாத நிலையில் இருப்பது திருப்தி அளிக்கவில்லை என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் அலேக்சாண்டர் நந்தா லிங்கியுடன் கலந்தாலோசித்ததில், ஏழைப் பள்ளிகள், மோசமான மருத்துவமனைகள், கழிவறை பழுது போன்ற மறு சீரமைப்பு திட்டங்களை, ஏற்கெனவே நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் பொதுப்பணித்துறை சுமக்க வேண்டியதில்லை என்றும் அவை மாவட்ட அலுவலகங்களுக்கு அல்லது பிற துறைகளுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


