Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காருக்குள் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஜோடி கைது
தற்போதைய செய்திகள்

காருக்குள் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஜோடி கைது

Share:

பத்து பாஹாட், ஆகஸ்ட்.06-

காருக்குள் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்களான ஒரு காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

நேற்று பின்னிரவு 12.35 மணியளவில் ஜோகூர், பத்து பாஹாட்டில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 26 மற்றும் 23 வயதுடைய அந்த பல்லைக்கழக மாணவர்களை ஜோகூர் மாாநில இஸ்லாமிய சமய இலாகா அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.

பாடம் தொடர்பாக இருவரும் கலந்து ஆலோசித்துக் கொண்டு இருப்பதாக அந்த மாணவர் ஜோடியினர் கூறிய காரணத்தை அமலாக்க அதிகாரிகள் நிராகரித்தனர்.

முதுகலைப் பட்டப்படிப்பு மாணவனும், இளங்கலை பட்டப்படிப்பு மாணவியும் கல்வத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்று அமலாக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்னும் திருமணம் ஆகாக இருவரும் வடப் பகுதியில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Related News