Sep 24, 2026
Thisaigal NewsYouTube
கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை
தற்போதைய செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

Share:

கஞ்சா செடிகளை வளர்த்ததோடு, அதனை கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தையையும், அவரது இரண்டு மகன்களையும், ஷா ஆலம் உயர்நீதிமன்றம் நேற்று அக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்தது.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு தரப்பு முதற்கட்ட ஆதாரங்களை முன்வைக்கத் தவறியதாகக் கூறி நீதிபதி அஸ்லாம் சைனுதீன் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் 63 வயதான அனியல் செப்னானி மற்றும் அவரது மகன்களான 38 வயதான நேதன் செப்னானி, 35 வயதான சேதாந்த் செப்னானி ஆகியோர் ஆவர்.

அச்சகத் தொழிலில் ஈடுபட்டு வந்த மூவரும், கடந்த 2021-ஆம் ஆண்டு, மார்ச் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 300 கிராமுக்கும் அதிகமான கஞ்சா கடத்தியதுடன், கஞ்சா செடிகளை வளர்த்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News