Jul 4, 2026
Thisaigal NewsYouTube
கல்லூரி மாணவர்கள் இருவருக்கு பாலியல் தொல்லை; ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர்கள் இருவருக்கு பாலியல் தொல்லை; ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

15 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஊழியர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருதின் சமாஹ் கூறுகையில், நேற்று அந்த இரு மாணவர்களிடமிருந்தும் போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இருவரும் கிளென்மேரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்றும், குற்றச்சாட்டுக்குள்ளான நபர் அந்த கல்வி நிறுவனத்தின் ஊழியர் என நம்பப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் மாணவர், கல்லூரி விடுதியின் கழிவறையில், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மாணவர், செக்ஷன்18 பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில், அவர் தன்னை ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், தலைமறைவாக உள்ள சந்தேகநபரை தேடி வருகின்றனர்.

Related News