Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்க இலக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்க இலக்கு

ஜார்ஜ்டவுன், ஜூன்.10-

உல்லாசக் கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்குவதற்கான இலக்கு வகுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இதன் மூலம் உள்ளூர் சமூகத்தையும், பொருளாதார ரீதியாக நாட்டையும் ஒட்டுமொத்த அளவில் உயர்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உல்லாசக் கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்குவது மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். அனைத்துலக அளவில் கைவினைப் பொருட்களின் விற்பனை, உள்ளூர் உணவு வகைகளைப் பிரபலப்படுத்த முடியும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இன்று 2025 ஆம் ஆண்டுக்கான குருஸ்வேர்ல்ட் மலேசியா உல்லாசக் கப்பலின் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →