Sep 24, 2026
Thisaigal NewsYouTube
 பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட்  அபராதம்!
தற்போதைய செய்திகள்

பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட் அபராதம்!

Share:

கடந்த ஆண்டு தேசிய தின விழாவின் போது, பேரா சுல்தான் நஸ்ரின் ஷா மீது வன்முறையைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 42 வயது பெண் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 500 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2025 ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்ற விழாவில், மாநிலப் பண் இசைக்கப்பட்ட போது நுர்ஹஸ்வானி அஃப்னி முகமது சோர்க்கி என்ற பெண், அரச மேடை மீது ஏறி பேரா சுல்தானைப் பிடித்துத் தள்ளியுள்ளார். இதனால் சுல்தான் நிலைதடுமாறிய நிலையில், பாதுகாப்புப் படையினர் அவரை உடனடியாக மீட்டனர். பாதுகாப்பு அதிகாரி போல வேடமிட்டு வந்த அந்தப் பெண்ணுக்கு மனநலப் பாதிப்பு இருந்தபோதிலும், அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவர் என சான்றளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related News