Oct 8, 2026
Thisaigal NewsYouTube

மாது ஒருவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாது ஒருவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

அலோர் காஜா, ஆகஸ்ட்.08-

மலாக்கா, அலோர் காஜா, தாமான் ஶ்ரீ கமேலான் என்ற இடத்தில் வீட்டில் மாது ஒருவர், உணவு பரிமாறும் மேஜை மீது தலை சாய்த்தவாறு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று இரவு 7.44 மணியளவில் கிடைக்க பெற்றத் தகவலின் அடிப்படையில் தீயணைப்புப் படையினர் உதவியுடன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது மாது இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அலோர் காஐா மாவாட்ட துணை போலீஸ் தலைவர் அஸ்ருல் முகமட் தெரிவித்தார்.

58 வயதுடைய அந்த மாதுவின் சடலம், சவப் பரிசோதனைக்காக அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →