Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் இரு பெண்கள் மரணம், நால்வர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் இரு பெண்கள் மரணம், நால்வர் காயம்

தங்காக், ஜூன்.10-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பழுதடைந்த டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 168.5 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர், தங்காக் அருகில் நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரியில் மோதிய டொயோட்டா வியோஸ் காரில் அறுவர் பயணம் செய்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

நான்கு ஆடவர்களும், இரு பெண்களும் ஜோகூர் பாருவிலிருந்து மலாக்கா, மெர்லிமாவை நோக்கி வந்து கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →