Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்றத் தேர்தல் சுவாரஸ்யமாகவும் சுமுகமாகவும் இருக்கும்
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் சுவாரஸ்யமாகவும் சுமுகமாகவும் இருக்கும்

Share:

வரும் ஜுலை மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வேட்பாளர்களின் முதல் தோற்றம் மட்டுமின்றி, எட்டு முன்னாள் அம்னோ தலைவர்களையும் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக நடைபெறும் என்று பெரிக்காதான் நேஷனல் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தெரிவித்தார்.
ஆனால் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டும், வேட்பாளராக திகழும் தலைவர்களின் பெயரை அறிவிக்க அஸ்மின் அலி மறுப்பு தெரிவித்தார்.

விளைவு எதுவாக இருந்தாலும், பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகளின் இரண்டு யோசனைகளுக்கு இடையிலான போர் நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News