Mar 24, 2026
Thisaigal NewsYouTube
NUR FARAH KARTINI-யின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை
தற்போதைய செய்திகள்

NUR FARAH KARTINI-யின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை 17-

சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கம்போங் ஸ்ரீ கிளேடாங்-ங்கிலுள்ள தோட்டம் ஒன்றில், நேற்று முன்தினம் 25 வயது நூர் ஃபரா கார்த்தினி அப்துல்லா எனும் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.

அப்பெண்ணின் மார்பு மற்றும் முகம் ஆகிய பகுதிகள் அழுகியிருந்ததால், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளின் ஆய்வக முடிவு, சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் நிபுணத்துவ தரப்புக்கு கிடைத்த பின்னரே, அது தெரியவரும் என்றாரவர்.

நூர் ஃபரா கார்த்தினி-யின் கொலை தொடர்பான விசாரணைக்காக 7 நாள்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவரது காதலரும் போலீஸ் உறுப்பினருமான 26 வயது ஆடவரின் TOYOTA வகை வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை, ஹுசைன் உறுதிபடுத்தினார்.

Related News