Mar 24, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூருக்கான நீர் விநியோகம் குறித்து உடன்படிக்கைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூருக்கான நீர் விநியோகம் குறித்து உடன்படிக்கைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை 17-

சிங்கப்பூருக்கு தருவிக்கப்படும் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோகம் குறித்த அனைத்து உடன்படிக்கைகளையும் அரசாங்கம் மறு ஆய்வு செய்யவுள்ளதாக, துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபதில்லா யூசோஃப் தெரிவித்தார்.

கடந்த 1962ஆம் ஆண்டிலிருந்து, சிங்கப்பூருக்கு தருவிக்கப்படும் ஒவ்வோர் ஆயிரம் GELEN நீருக்கும், மலேசிய மதிப்பில் 3 காசு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளதை,எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபதில்லா சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது காலத்திலிருந்து அந்த உடன்படிக்கைகள் இருந்துவரும் நிலையில், அவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து, நடப்பு அரசாங்கம் ஆராயவுள்ளது என்றாரவர்
.

Related News