Mar 11, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தியதாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

21 கிலோ ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாக ஒரு மாற்றும் திறனாளி உட்பட இரண்டு இந்திய இளைஞர்கள் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

39 வயதுடைய ஒரு மாற்றுத் திறனாளியான எஸ். கணேசன் மற்றும் ஆர்.ஆர். பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த மே 16 ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஜாலான் ஜெலாபாங் பாயு 6, புன்சாக் ஜெலாபாங், ஈப்போ என்ற இடத்தில் 21 கிலோ போதைப்பொருளைக் கடத்தியதாக மாஜிஸ்திரேட் ஜெசிகா டைமிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டம் 39 B பிரிவின் கீழ் கணேசனும், பிரபாகரனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் இருவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு