Jul 10, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் அரசியல் களம் சுறுசுறுப்பு: ஜோகூர் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1-இல் தேர்தல்! - எஸ் பி ஆர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டின் அரசியல் களம் சுறுசுறுப்பு: ஜோகூர் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1-இல் தேர்தல்! - எஸ் பி ஆர் அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, ஜூன் 12 – நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்கான 16 ஆவது சட்டமன்றத் தேர்தல் தேதிகளை மலேசிய தேர்தல் ஆணையமான எஸ் பி ஆர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, இரு மாநிலங்களுக்கும் வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.

இன்று புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு, அதன் தலைவர் ரம்லான் ஹரூண் செய்தியாளர்களிடம் இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.

ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜுன் 27 ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டியே வாக்குப்பதிவு ஜுலை 7 ஆம் தேதி நடைபெறும். தேர்தல் பிரச்சார காலம் 14 நாட்கள் என்று ரம்லன் ஹரூண் அறிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கான 36 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் ஜுலை 18 ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டியே வாக்குப்பதிவு ஜுலை 28 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்