Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்
அரசியல்

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

Share:

தெற்கு தாய்லாந்தின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான குழுவின் புதிய தலைவராக தானுத் சுவர்ணானந்தா நியமிக்கப்பட்டிருப்பதை மலேசியா வரவேற்றுள்ளது. இதற்கான முழுமையான ஒத்துழைப்பை மலேசியா வழங்கும் என்று மலேசியத் தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இன்று உறுதிபடத் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை தந்துள்ள தாய்லாந்தின் புதிய தற்காப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் அதுல் பூன்தும்ஜாரோயன் இன்று கோலாலம்பூரில் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மலேசியத் தற்காப்பு அமைச்சர், இரு நாடுகளும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தெற்கு தாய்லாந்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் முற்றிலும் தாய்லாந்தின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும், மலேசியாவின் பங்கு அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்குவது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மலேசியாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சிறப்பு உதவியாளர் Datuk ராபின் பாசிர், தொடர்ந்து இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்றும் மலேசியத் தற்காப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்