Aug 28, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவிக்கிறார் அன்வார்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவிக்கிறார் அன்வார்

Share:

16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

கோலா பிலா, டத்தாரான் மேலாங் பகுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என நெகிரி செம்பிலான் பிகேஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு தலைமையகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அன்வார் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News