பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸாவை கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக அம்மாநில பெர்சாத்து கட்சி அறிவித்துள்ளது.
இந்த இடைநீக்கம் கட்சியின் இரண்டு தேர்தல் தவணைகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பெர்லிஸ் மாநில பெர்சாத்து தலைவர் இஸிஸாம் இப்ராஹிம் உறுதிப்படுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், கோலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினரான அபு பாக்காருக்கு, இடைநீக்கம் தொடர்பான கடிதம் கடந்த வாரம் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் மத்திய தலைமைத்துவம் மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ முடிவுக்காகக் காத்திருப்பதாக இஸிஸாம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இடைநீக்கக் கடிதம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அதைத் தாம் யாருக்கும் விநியோகிக்கவில்லை என்றும் இஸிஸாம் இப்ராஹிம் விளக்கமளித்துள்ளார்.








