Oct 22, 2026
Thisaigal NewsYouTube

பெர்சாத்து கட்சியின் இடைநீக்க முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - மந்திரி பெசார் அபு பக்கார் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெர்சாத்து கட்சியின் இடைநீக்க முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - மந்திரி பெசார் அபு பக்கார் உறுதி

பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா, பெர்சாத்து கட்சியிலிருந்து தாம் இடைநீக்கம் செய்யப்பட்ட முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு எடுத்த முடிவை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கட்சியின் இடைநீக்க நடவடிக்கையானது தமது மந்திரி பெசார் பதவியைப் பாதிக்காது என்றும், மாநில நிர்வாகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், கட்சியின் நடவடிக்கையையும் மாநில நிர்வாகத்தையும் பொதுமக்கள் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளக்கூடாது எனக் குறிப்பிட்ட அபு பாக்கார் ஹம்ஸா, கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் இடைநீக்கம் என்பது கட்சி சார்ந்த விவகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

மாநில மந்திரி பெசார் என்ற முறையில் பெர்லிஸ் மாநில அரசியலமைப்புக்கு இணங்கத் தொடர்ந்து மாநிலத்தை நிர்வகிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

சரவாக் சட்டமன்றம் இவ்வாரமே கலைக்கப்படுமா? வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனப் பரபரப்பு

சரவாக் சட்டமன்றம் இவ்வாரமே கலைக்கப்படுமா? வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனப் பரபரப்பு

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி