Sep 24, 2026
Thisaigal NewsYouTube
வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்
அரசியல்

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

Share:

எதிர்வரும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றியைப் பெறுவதற்காக மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் அடகு வைக்கப் போவதில்லை என்று பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பி.கே.ஆர் கட்சி உறுதியாகத் தெரிவித்துள்ளது.

தேர்தல் யுக்திகளை வகுக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ள பி.கே.ஆர் பொதுச்செயலாளர் புசியா சலே, தங்களின் அரசியல் நகர்வுகள் அனைத்தும் மக்களின் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றார்.

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் அனைத்து 36 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. பாரிசான் நேஷனல் 25 தொகுதிகளிலும், பெர்சத்து 24 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளிலும் களம் காணவுள்ளன.

Related News