Aug 16, 2026
Thisaigal NewsYouTube
மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை
அரசியல்

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கும், தாம் பிறந்த மண்ணான ஜெராம் பாடாங்கிற்கும் சேவையாற்றும் நோக்கில் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஜி. மணிவண்ணனை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர்.யுனேஸ்வரன் தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினராக மணிவண்ணன், பிகேஆர். கட்சியில் மூத்தத் தலைவர், மத்திய அளவில் கட்சிக்கு சேவையாற்றி வந்தாலும் தாம் பிறந்த மண்ணான ஜெராம் பாடாங் தொகுதியின் பிகேஆர் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகிறார் என்று சிகமாட் எம்.பி.யான யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.

முன்னதாக, வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த மணிவண்ணனுக்கு பக்காத்தான் ஹராப்பான் தகவல் பிரிவுத் தலைவரும், தொடர்புத்துறை அமைச்சரமான டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில், யுனேஸ்வரன் உட்பட உற்சாக வரவேற்பை நல்கி வேட்புமனுத்தாக்கல் மையத்திற்கு ஆதராவளர்களுடன் புடை சூழ அழைத்துச் சென்றனர்.

Related News

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து