Jul 28, 2026
Thisaigal NewsYouTube
உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்
சிறப்பு செய்திகள்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

Share:

ஈப்போ, பிப்ரவரி.18-

65 நாடுகளின் கொடிகளை 1 நிமிடம் 14 வினாடிகளில் அடையாளம் கண்டு கூறி, மலேசியாவின் பேராக் மாநிலம், கம்பார் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஷாவின் குழந்தைகளுக்கான உலகச் சாதனையைப் படைத்து, Kids book of Records என்ற சாதனைப் புத்தகத்திலும் பெயர் பதித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, கம்பாரில் நடைபெற்ற இந்நிகழ்வில், நினைவாற்றல் மற்றும் பொது அறிவுத் துறையில் ஷாவின் தனது அசாத்திய திறனை வெளிப்படுத்தி ஒரு புதிய மைல்கல்லை எட்டியதால் அவருக்கு இந்த சாதனையானது வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், 65 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் கண்டு வாசித்து, பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்த ஷாவின் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அச்சிறுவனின் சாதனையை அறிந்து, Prima Kampar Residensi-யிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் வி. பவானி ஷாஷா, அவருக்கு தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

ஷாவின் குழந்தையாக இருக்கும் போது, பொழுதுபோக்கிற்காக அவனிடம் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை காட்டி அடையாளம் காணுமாறு கூறிய அவரது தந்தை வினோத், பின்னர் அவனது அசாத்திய நினைவாற்றலைக் கண்டு, தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், அப்பெற்றோர் பல முயற்சிகள் எடுத்து, ஷாவினை உலகச் சாதனை படைக்கும் அளவிற்கு ஊக்குவித்ததாகவும் பவானி ஷாஷா குறிப்பிட்டுள்ளார்.

சிறு வயதிலிருந்தே உலகச் சாதனைகள் படைத்து வரும் ஷாவின் போன்ற குழந்தைகளால், மாலிம் நவார் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள் என்று தான் நம்புவதாகவும் பவானி ஷாஷா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ஷாவின் மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

Related News

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

தம்பின் மக்களின் நீண்டகால கனவு நனவானது: புக்கிட் ஜாலோர் மின் சுடலை கட்டுமானப் பணி துவக்கம்

தம்பின் மக்களின் நீண்டகால கனவு நனவானது: புக்கிட் ஜாலோர் மின் சுடலை கட்டுமானப் பணி துவக்கம்

மலேசியாவின் அடுத்த சிலிக்கான் வேலி: நெகிரி செம்பிலானின் 'எம்விவி 2.0' நவீன நகரப் புரட்சி

மலேசியாவின் அடுத்த சிலிக்கான் வேலி: நெகிரி செம்பிலானின் 'எம்விவி 2.0' நவீன நகரப் புரட்சி