டிஜிட்டல் யுகத்திலும் அச்சு ஊடகத்தின் வலிமையை நிரூபிக்கும் வகையில், இணையதளத்தோடு ‘வாராந்திர சஞ்சிகையையும்’ கம்பீரமாக வெளியிட்டு வருகிறது ‘திசைகள்’ ஊடகம்!

நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் இன்று மாலை 4 மணியளவில் மற்றுமொரு வரலாற்றுத் தருணம் பதிவானது. அம்பாங்கான் தொகுதி பிரச்சாரத்திற்கு வந்திருந்த நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம், திசைகள் ஊடகத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதி தேர்தல் சிறப்புச் சஞ்சிகையை நேரில் வழங்கினார்.

டிஜிட்டல் செய்திகளுக்கு மத்தியில், காகித வாசனையோடு கைகளில் தவழ்ந்த திசைகள் சஞ்சிகையைப் பிரதமர் , மிகுந்த ஆவலுடனும், நெகிழ்ச்சியுடனும் வாங்கிப் பார்த்தார். சஞ்சிகையின் தரமான வடிவமைப்பு மற்றும் உள்ளடக்க விபரங்கள் குறித்து திசைகள் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதியிடம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மிகுந்த மகிழ்ச்சியோடு கேட்டறிந்த தருணம், திசைகள் ஊடகத்தின் அச்சுப் பணிக்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாகும்!









