Oct 18, 2025
Thisaigal NewsYouTube
2வது டி20 போட்டியிலும் வெற்றி - அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
விளையாட்டு

2வது டி20 போட்டியிலும் வெற்றி - அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Share:

இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். சாம்சன் 40 ரன்னும், ரிங்கு சிங் 38 ரன்னும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் மட்டும் போராடினார். அவர் அரை சதமடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க் அடைர்23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா சார்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Related News