Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்- தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அனாஹத் சிங்
விளையாட்டு

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்- தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அனாஹத் சிங்

Share:

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஏனா குவாங்கை வீழ்த்தினார்.

முன்னதாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் டோய்ஸ் லீயையும், அரை இறுதி ஆட்டத்தில் விட்னி இசபெல் வில்சனையும் வீழ்த்தினார் அனாஹத்சிங். கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற தொடரிலும் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

Related News