Jul 15, 2026
Thisaigal NewsYouTube
கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்
உலகச் செய்திகள்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

Share:

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலை மையமான ஜான் எஃப். கென்னடி கலை மையத்தின் முகப்பில் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை அகற்றும் பணிகள் சனிக்கிழமை அதிகாலை தீவிரமாக நடைபெற்றுள்ளன. நீதிமன்றம் விதித்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையின் காரணமாகப் பாதுகாப்பு கருதி இப்பணிகள் சில மணி நேரங்கள் தாமதமாகி சனிக்கிழமை அதிகாலையில் தொடங்கப்பட்டன.

கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த கலை மையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகத் தன்னை நியமித்துக் கொண்டதுடன், அதன் பெயரை 'டிரம்ப்-கென்னடி கலை மையம்' என்றும் மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையை எதிர்த்து, கலை மையத்தின் குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி எம்பியான ஜாய்ஸ் பீட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மத்திய நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி கலை மையத்தின் பெயரை மாற்றியமைக்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும், ஜூன் 12ஆம் தேதிக்குள் டிரம்ப்பின் பெயரை அனைத்து இடங்களிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டார். மேலும், கலை மையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மூடிப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இருந்த நிர்வாகத்தின் திட்டத்திற்கும் நீதிபதி தடை விதித்தார்.

இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்த அவசர மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை நிராகரித்தது. கலை மையத்தின் இணையதளப் பக்கங்களில் இருந்து டிரம்ப்பின் பெயர் ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், கட்டிடத்தின் முகப்பில் இருந்த பெரிய எழுத்துக்களை அகற்றும் பணிகளைப் பொதுமக்கள் பலர் நேரில் கூடிப் பார்வையிட்டனர். டிரம்ப் தரப்போ, பெயர் நீக்கத்தால் கலை மையத்திற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று வாதிட்டுள்ளது.

Related News

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்