Sep 13, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா
உலகச் செய்திகள்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

Share:

உயர்கல்வித் தேர்வுகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த முறைகேடுகளைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தேர்வுகளில் நிலவும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று அவரைப் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய இந்தத் தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுபெற்றன.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிரதான், தாம் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். பல முக்கியப் பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக எழுந்த இந்தப் புகார்கள் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News