Apr 18, 2026
Thisaigal NewsYouTube
பேரழிவின் தொடக்கம்? புரட்டிப் போட்ட வெள்ளம்.. லிபியாவில் 2000 பேர் பலி! பல ஆயிரம் பேர் மாயம்
உலகச் செய்திகள்

பேரழிவின் தொடக்கம்? புரட்டிப் போட்ட வெள்ளம்.. லிபியாவில் 2000 பேர் பலி! பல ஆயிரம் பேர் மாயம்

Share:

திரிபோலி: லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.

இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மிக பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளை இந்த கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால் டெர்னா நகரில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம்: இந்த வெள்ளத்தில் குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணிகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாகக் கிழக்கு லிபியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லிபிய தேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மிஸ்மாரி கூறுகையில், "டெர்னா நகரம் பேரழிவைச் சந்தித்துள்ளது.. அங்குள்ள அணைகள் இடிந்த நிலையில், அங்குப் பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தால் 5,000-6,000 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களைத் தேடும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

பாதிப்பு: கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அங்கே எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு மக மோசமாக இருக்கும் நிலையில், சர்வதேச நாடுகளின் உதவியை லிபியா கோரியுள்ளது.

Related News

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்