Jun 22, 2026
Thisaigal NewsYouTube
மொத்தமாக முடங்கிய ஜெர்மனி.. மாறிய கிளைமேட்.. ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு.. மக்கள் தவிப்பு
உலகச் செய்திகள்

மொத்தமாக முடங்கிய ஜெர்மனி.. மாறிய கிளைமேட்.. ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு.. மக்கள் தவிப்பு

Share:

முனிச்: ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் தெற்கு பகுதிகள் பனிப்பொழிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முனிச் நகரத்தில் ரயில், பேருந்து போக்குவரத்து மட்டும் இன்றி விமான சேவையும் முடங்கியது. கடந்த 1933 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக் கடுமையான அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான கால கட்டத்தில் மட்டும் 40 செ.மீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கின்றன. இதனால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கூட பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டு நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

முனிச் நகரத்தில் விமான சேவையும் பாதிக்பட்டுள்ளது. அதிகப்படியான பனிப்பொழிவால் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால், 760 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ஏற்பட்ட இந்த பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி