Sep 13, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியாவில் சைபர் மோசடி கும்பல் வேட்டை: 3 மலேசியர்கள் உட்பட 49 பேர் கைது
உலகச் செய்திகள்

கம்போடியாவில் சைபர் மோசடி கும்பல் வேட்டை: 3 மலேசியர்கள் உட்பட 49 பேர் கைது

Share:

கம்போடியா தலைநகர், நோன்பென்னில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக 3 மலேசியர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 687 கைபேசிகள் , 46 மலேசிய சிம் கார்டுகள் மற்றும் ஏராளமான கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் கம்போடியாவைத் தளமாகக் கொண்டு, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை "போலி முதலீட்டுத் திட்டங்கள்" மூலம் ஏமாற்றி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மைய காலமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய 'சைபர் ஸ்கேம்' புகார்கள் அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் வேலை தேடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சு, அறிவுறுத்தி வருகிறது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை