Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கனடா கூட்டறிக்கை
உலகச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கனடா கூட்டறிக்கை

Share:

ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய தேவையான முயற்சிகளில் இணைவதற்கு தயார் என முக்கிய ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் கனடா ஆகியவை இணைந்து நேற்று வியாழக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும், எரிசக்தி சந்தைகளை நிலைநிறுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாக அவை குறிப்பிட்டுள்ளன.

இந்த கூட்டு அறிக்கையை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ளன.

பெர்சியன் வளைகுடா பகுதியில் ஆயுதமற்ற வணிகக் கப்பல்களை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்களைக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளன.

அத்துடன், ஈரான் படைகள் ஹோர்முஸ் நீரிணையை நடைமுறையில் முடக்கியுள்ள சூழ்நிலையையும் கடுமையாக எதிர்ப்பதாகவும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை