Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!
உலகச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

Share:

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஏப்ரல் 20 நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது இம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநகரில் இருந்து உதம்பூர் நோக்கிச் சென்ற அந்தப் பயணிகள் பேருந்து, காகோட் கிராமத்தின் அருகே உள்ள வளைவான மலைப்பாதையில் திரும்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தவுடனேயே உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்; பின்னர் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை