Jun 13, 2026
Thisaigal NewsYouTube
உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது
உலகச் செய்திகள்

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது

Share:

துபாய், டிசம்பர்.07-

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் வானளாவிய உயரத்துக்கு கட்டத் திட்டமிடப்படவில்லை என்றும், தற்செயலாக நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், 'சீல் டவர்' என்ற பெயரில் வானுயர ஹோட்டல் ஒன்றை, 'இம்மோ பிரஸ்டீஜ் லிமிடெட்' என்ற நிறுவனம் திறந்துள்ளது.

கண்ணாடி மாளிகை இந்த ஹோட்டலை, 'தி பர்ஸ்ட் குரூப்' என்ற கட்டுமான நிறுவனம் கட்டி கொடுத்துள்ளது. கண்ணாடி மாளிகையாக ஜொலிக்கும் இந்த ஹோட்டலில், மொத்தம் 82 தளங்கள், 1,004 அறைகள் உள்ளன.

''இந்த ஹோட்டல் இவ்வளவு உயரத்தில் கட்ட முதலில் தீர்மானிக்கப்படனில்லை. வரைபடங்கள் திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட போது இதன் உயரம் எதிர்பாராதவிதமாக அதிகரிக்கப்பட்டது,'' என, 'தி பர்ஸ்ட் குரூப்'பின் தலைமை செயல் அதிகாரி ராப் பர்ன்ஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''நாங்கள் கண்கவர் கட்டடம் ஒன்றைக் கட்ட விரும்பினோம். அதற்காக ஒவ்வொரு வசதிகளாக சேர்த்து கொண்டே சென்றோம்.

''இறுதியில், அது உலகின் மிக உயரமான கட்டடமாக மாறியது. உலகின் மிக உயர ஹோட்டலை கட்ட வேண்டும் என, நாங்கள் நிச்சயமாக திட்டமிடவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது,'' என்றனர்.

ஹோட்டல் உச்சியில் உள்ள, 'ஸ்கை லவுஞ்ச்' எனப்படும் ஓய்விடம் மற்றும் பிற உயரமான தளங்களில் இருந்து துபாய் கடற்கரை, பாம் ஜுமேரா மற்றும் வளைகுடாவின் 360 டிகிரி முழுமையான காட்சியை பார்க்க முடியும்.

மேலும், 76வது தளத்தில் காற்றை செலுத்தும் வெற்றிடத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர், வானத்தில் மறைவது போல இருக்கும்.

பாரம்பரியம் செங்குத்தான பூங்காக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், மேல் தளத்தில் பிரிட்டனை தளமாகக் கொண்ட, 'டட்டு பிராண்டு' உட்பட மொத்தம் எட்டு உ ணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல், பிரமாண்ட கட்டடங்களை விரும்பும் துபாயின் பாரம்பரியத்துக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி