Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
உலகச் செய்திகள்

இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Share:

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் வேளையில், மேற்குகரையின் ஜெனின் நகரில் ஹாமாஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய புள்ளி பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் இஸ்ரேல் அதிரடி படைவீரர்கள் ஜெனின் நகர் பகுதியில் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தியதில் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர்.

அதனை சமாளிக்க இஸ்ரேல் ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த அதிரடி தாக்குதலில் 29 பயங்கரவாதிகள் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related News