Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வங்கதேச முன்னாள் பிரதமர் மகனுக்கு எதிராகக் கைது ஆணை
உலகச் செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் மகனுக்கு எதிராகக் கைது ஆணை

Share:

டாக்கா, டிசம்பர்.05-

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனுக்கு எதிராக, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

வங்காளதேசத்தில், கடந்தாண்டு ஆகஸ்டில் அரசுக்கு எதிராக நடந்த இளைஞர் போராட்டத்தால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இழந்தார். மேலும், நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இளைஞர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில், 1,400 பேர் உயிரிழந்தனர். மாணவர்களைக் கொடூரமாக அடக்க முயன்றதாக ஷேக் ஹசீனா மீது, அந்நாட்டின் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட மூன்று ஊழல் வழக்குகளுக்காக, 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனா மட்டுமின்றி, அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகன் சஜீப் வஜித் பாய் மற்றும் மகள் சைமா வஜித் புத்துல் ஆகியோருக்கும், தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப வல்லுனரான சஜீப் வஜித் ஜாய், 54, அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர், தன் தாய் ஹசீனாவுக்கு தகவல் தொடர்பு ஆலோசகராக உள்ளார். இந்நிலையில் மாணவர் மீதான ஒடுக்குமுறை தொடர்பாக அவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா