Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் மரண தண்டனைக்கு ஆதரவு அளிக்கிறார்கள் – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கருத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் மரண தண்டனைக்கு ஆதரவு அளிக்கிறார்கள் – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கருத்து

சிங்கப்பூர், நவம்பர்.29-

சிங்கப்பூரில் கடுமையான குற்றங்களுக்காகத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருவதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நியாயப்படுத்தியுள்ளார்.

சமுதாயத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் அது போன்ற தண்டனைகள் அவசியம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பெரும்பாலான சிங்கப்பூரியர்கள், மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவிப்பதால் தான், அச்சட்டமானது தொடர்ந்து நிலை நிறுத்தப்படுவதற்கு முக்கியக் காரணம் என்றும் மலேசிய ஊடகவியலாளர்களுடன் நடந்த உரையாடலில் விவியன் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நடத்திய இணைய கணக்கெடுப்பில், சிங்கப்பூரில் 84 விழுக்காட்டினர், கொலை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மரண தண்டனை தான் உதவுவதாக விவியன் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →