Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்
உலகச் செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்

Share:

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழக முதல்வரும், திமுக. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது 'திராவிட மாடல்' சாதனைகளை முன்வைத்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். அவர் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

எடப்பாடி பழனிசாமி, தலைமையில் அதிமுக, பாஜக மற்றும் பாமகவுடன் இணைந்து களம் காண்கிறது. திமுக அரசு மீதான விமர்சனங்களை முன்வைத்து இன்று மாலை தனது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி, முதல்முறையாக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. விஜய் இன்று சென்னை நந்தனத்தில் உரையாற்றித் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி நிறைவு செய்தார். அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, வழக்கம்போலப் பல முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

அமைதியான முறையில் தேர்தலை நடத்த 295 துணை ராணுவப் படைப் பிரிவுகள்" பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை