Apr 15, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கில் பற்றியது போர் நெருப்பு! ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: அதிரும் அரபு தேசங்கள்
உலகச் செய்திகள்

மத்திய கிழக்கில் பற்றியது போர் நெருப்பு! ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: அதிரும் அரபு தேசங்கள்

Share:

வாஷிங்டன், பிப்ரவரி.28-

மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வந்த பதற்றம் தற்போது உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரான் நாட்டின் மீது தரை, கடல் மற்றும் வான் வழியாகப் பிரம்மாண்டமான கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

ஈரானைச் சுற்றி வளைத்துள்ள இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் அமெரிக்கப் படைகள், ஈரானின் ராணுவத் தளங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அணுசக்தி ஆய்வு மையங்கள் என 30-க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்படுகின்றன. அதே வேளையில், அதிநவீன போர் விமானங்கள் மூலம் வான்வழியாகவும் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானும் தனது வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர்க்களமாக மாறியுள்ளது.

போர் காரணமாக ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. இதனால் பன்னாட்டு விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அச்சுறுத்தும் ஏவுகணைத் தளங்களை அழிப்பதும், அதன் கடற்படையை நிர்மூலமாக்குவதும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

Related News

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

தென் சீனக் கடல்: சீனப் படகுகள் சயனைடு விஷத்தைப் பயன்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

தென் சீனக் கடல்: சீனப் படகுகள் சயனைடு விஷத்தைப் பயன்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு