Oct 2, 2026
Thisaigal NewsYouTube

இலங்கையில் வெள்ளம்: அவசர நிலை பிரகடனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இலங்கையில் வெள்ளம்: அவசர நிலை பிரகடனம்

கொழும்பு, நவம்பர்.29-

இலங்கையில் இன்று சனிக்கிழமை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. Ditwah புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

Ditwah புயலால் இலங்கையின் பல்வேறு மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகக் கடைசி நிலவரப்படி Ditwah புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

130க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. புயல் சேதம் கடுமையாக இருப்பதால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →