Sep 13, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் குடிநீர் பாட்டிலில் அமிலம்? தெரியாமல் அருந்திய இளம்பெண் கவலைக்கிடம்
உலகச் செய்திகள்

இந்தியாவில் குடிநீர் பாட்டிலில் அமிலம்? தெரியாமல் அருந்திய இளம்பெண் கவலைக்கிடம்

Share:

உத்தர பிரதேசம், ஜூலை.12-

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாப்பூரில், குடிநீர் என நினைத்து பாட்டிலில் இருந்த அமிலத்தை அருந்திய இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல குடிநீர் நிறுவனத்தின் பாட்டில் போல் தோன்றிய அந்த பாட்டிலில், தண்ணீருக்கு பதிலாக அமிலம் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

அதனை அருந்திய சில நொடிகளில் வலியால் துடித்த அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், அலட்சியத்தால் நிகழ்ந்ததா? அல்லது சதியா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News