Sep 13, 2026
Thisaigal NewsYouTube
படையப்பா நீலாம்பரி ரேஞ்ச் பழிவாங்கல்: உலகக்கோப்பை கனவைக் கலைத்த "வகுப்பறை வில்லன்"!
உலகச் செய்திகள்

படையப்பா நீலாம்பரி ரேஞ்ச் பழிவாங்கல்: உலகக்கோப்பை கனவைக் கலைத்த "வகுப்பறை வில்லன்"!

Share:

பள்ளி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கோல் அடிப்பது போன்ற கற்பனையோடு பந்தை உதைக்கச் சென்ற சிறுமியின் கனவை, அவரது வகுப்புத் தோழன் கடைசி நொடியில் தடுத்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளி இடைவேளையின் போது நடைபெற்ற அந்த கால்பந்து விளையாட்டில், ஒரு சிறுமி பந்தை லாவகமாகக் கடத்திச் சென்று கோல் அடிக்கக் காலை ஓங்கிய நொடியில், மற்றொரு மாணவன் குறுக்கே புகுந்து பந்தைத் உதைத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி அப்படியே உறைந்துபோய் நின்ற காட்சி நெட்டிசன்களைக் குலுங்கிச் சிரிக்க வைத்துள்ளது.

சர்வதேச உலகக்கோப்பை இறுதி நிமிடப் பதற்றத்தை நினைவுபடுத்திய இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "சிறந்த டிஃபெண்டர் இவன்தான்" என்றும், "பாவம் அந்தச் சிறுமியின் கனவு நொறுங்கிவிட்டது" என்றும் நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related News