Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தமிழக சட்டமன்றத் தேர்தல்: மாலை 3 மணி வரை 70% வாக்குப்பதிவு - வன்முறைச் சம்பவங்களால் பரபரப்பு
உலகச் செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல்: மாலை 3 மணி வரை 70% வாக்குப்பதிவு - வன்முறைச் சம்பவங்களால் பரபரப்பு

Share:

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் சராசரியாக 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு ஒருபுறம் தீவிரமாக நடந்தாலும், சில இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூரில் திமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. இறுதி விழுக்காடு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை