ஊழல், முறைகேடு, லஞ்சம் மற்றும் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபர் சாரா துதெர்தே மீது அந்நாட்டின் செனட் சபையில் குற்றவியல் விசாரணை தொடங்கவுள்ளது. 48 வயதான சாரா துதெர்தே, முன்னாள் அதிபர் ரோட்ரிகோ துதெர்தேவின் மகள் ஆவார். கடந்த மே 11 அன்று அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தற்போதைய செனட் சபை விசாரணையின் முடிவு அவரது துணை அதிபர் பதவியைப் பறிப்பதுடன், 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் நிரந்தரத் தடையை ஏற்படுத்தக்கூடும். 24 இடங்களைக் கொண்ட செனட் சபையில் இரண்டு பங்கு மூன்றில் இரண்டு பகுதி பெரும்பான்மையுடன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மார்கோஸ் மற்றும் துதெர்தே ஆகிய இரு பெரும் அரசியல் குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் பிலிப்பைன்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிலாவில் உள்ள செனட் கட்டிடத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலகச் செய்திகள்
லிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா துதெர்தே மீது செனட் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் விசாரணை தொடக்கம்
Related News

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்


