ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் எல் நினோ காலநிலை மாற்றம் மிக வேகமாக ஒரு வலுவான நிகழ்வாக உருவெடுக்கும் என்றும், இதன் காரணமாக உலகளாவிய வெப்பநிலை உயர்ந்து கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த எல் நினோ தீவிரமடைவதால் உலகின் பல பகுதிகளில் வறட்சி, கடுமையான கனமழை மற்றும் நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதிகளில் வெப்ப அலைகள் வீசும் அபாயம் அதிகரிக்கும் என அதன் தலைவர் செலஸ்டி சௌலோ தெரிவித்துள்ளார். இந்த காலநிலை மாற்றத்தால் விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகள் பாதிக்கப்படலாம் என்பதால், நாடுகள் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்


