ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஈரான் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க இராணுவம் தாக்கியதைத் தொடர்ந்து இந்தத் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஈரான் கப்பலின் சுக்கானை தாக்கிச் சேதப்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானிய கடற்படை மூன்று அமெரிக்க அழிப்பிக் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் சேதமடைந்த அமெரிக்கக் கப்பல்கள் அந்தப் பகுதியிலிருந்து பின்வாங்க நேரிட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து உடனடி அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை


