Oct 18, 2025
Thisaigal NewsYouTube
வாடிக்கையாளர்கள் மீது கோடாரி தாக்குதல்
உலகச் செய்திகள்

வாடிக்கையாளர்கள் மீது கோடாரி தாக்குதல்

Share:

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் நேற்று இரவு 9 மணியளவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகமாக சென்று அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.

கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கோடாரி தாக்குதல் நடத்திய 24 வயது இளைஞரை கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

வாடிக்கையாளர்கள் மீது கோடாரி தாக்குதல் | Thisaigal News