Apr 17, 2026
Thisaigal NewsYouTube
"பின்னணியில் யார்!" காலிஸ்தானி கொலை விவகாரம்.. மீண்டும் உள்ளே வரும் ட்ரூடோ! இந்தியா குறித்து பரபர
உலகச் செய்திகள்

"பின்னணியில் யார்!" காலிஸ்தானி கொலை விவகாரம்.. மீண்டும் உள்ளே வரும் ட்ரூடோ! இந்தியா குறித்து பரபர

Share:

ஒட்டாவா: அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார்.

பஞ்சாபைத் தனியாக காலிஸ்தான் என்ற நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற பிரிவினைவாத இயக்கங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், வெளிநாடுகளில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் அங்கே இதுபோன்ற பிரிவினைவாதிகள் வெளிப்படையாகவே இயங்கி வருகிறார்கள். சிலர் அங்கிருந்தபடி இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களும் திட்டமிடுவதாகப் புகார்கள் உள்ளன.

கொல்ல சதி: இதற்கிடையே அமெரிக்காவில் இருக்கும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர், இவரைக் கொல்ல சதி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிகில் குப்தா இந்திய அரசின் ஊழியர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாட்டில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் குறித்துக் கூறியுள்ள தகவல்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஹர்தீப் சிங் கொலை விசாரணையில் இந்தியா உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!