Apr 17, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! 14 பேர் பலியான சோகம்.. செக் குடியரசில் ஷாக்
உலகச் செய்திகள்

பல்கலைக்கழகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! 14 பேர் பலியான சோகம்.. செக் குடியரசில் ஷாக்

Share:

ப்ராக்: செக் குடியரசில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராக் நகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை திடீரென துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி ஒளிந்திருக்கின்றனர். முதலில் இந்த சம்பவத்தில் சில மாணவர்களுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நேரம் போக போக உயிரிழப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்தன. தற்போது வரை 14 பேர் இதில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து அந்நாட்டு போலீசார் கூறுகையில், "24 வயது மாணவன் டேவிட் கோசாக் என்பவர்தான் இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் அவர் தனது தந்தையை கொலை செய்திருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது? இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன? டேவிட்டை தவிர வேறு யாரேனும் இதற்கு பின்னால் இருக்கிறார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டேவிட் மீது இதற்கு முன்னர் எந்த குற்ற வழக்கும் பதிவாகியிருக்கவில்லை. வரலாற்ற மாணவரான இவர், படிப்பில் திறமையானவர் என்று ஆசியர்களும் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை இவர் தனியா திட்டமிட்டு செய்திருக்கிறார். அவரிடம் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் சில இருந்திருக்கின்றன. தாக்குதலின்போது பல்கலைக்கழகத்தில் நுழையும்போது அவர் கையில் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்க பிறகு டேவிட் கொல்லப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. அமெரிக்காவில் இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், தற்போது செக் குடியரசிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்