Jun 22, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 
உலகச் செய்திகள்

இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

Share:

குஜராத், பிப்ரவ்ரி 25 -

குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் 'சுதர்ஷன் சேது' ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

2.3 கிமீ நீளமுள்ள அந்த பாலத்திற்கு 2017 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இது பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் என்று பிரதமர் அப்போது கூறினார்.நான்கு வழிச்சாலை 27.20 மீட்டர் அகலமுள்ள பாலத்தில் ஒவ்வொரு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன," என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் அதில் உள்ளன.'சிக்னேச்சர் பாலம்' என்று அழைக்கப்பட்ட இந்த பாலம், 'சுதர்சன் சேது' அல்லது சுதர்சன் பாலம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.

பேய்ட் துவாரகா என்பது ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவு ஆகும்.இது துவாரகா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் உள்ளது, அங்கு புகழ்பெற்ற கிருஷ்ணர் துவாரகாதீஷ் கோவிலும் அமைந்துள்ளது.

இன்று பாலத்தை திறப்பதற்கு முன் துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.குஜராத்தின் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை(எய்ம்ஸ்) பிரதமர் இன்று மதியம் ராஜ்கோட்டில் திறந்து வைக்க இருக்கிறார்.ராஜ்கோட் எய்ம்ஸ் தவிர, ஆந்திரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் இன்று பிரதமர் திறந்து வைக்கிறார்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி