Sep 13, 2026
Thisaigal NewsYouTube
வேலியே பயிரை மேய்ந்தது போல! சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது
உலகச் செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்தது போல! சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது

Share:

சென்னையில் போலீஸ் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஒருவனுக்கு இழைத்த பாலியல் தொல்லை காரணமாக வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர், அசோக் நகர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வேலியே பயிரை மேய்ந்தது போல, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே இதுபோன்ற கொடூரமான குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகுவது, பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News