Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஈரானுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை: அடுத்த 5 நாட்களுக்கு போர் நிறுத்தம்
உலகச் செய்திகள்

ஈரானுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை: அடுத்த 5 நாட்களுக்கு போர் நிறுத்தம்

Share:

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர், அடுத்த 1 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து வாஷிங்டனும், தெஹ்ரானும் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட நம்பகத்தன்மை காரணமாக, ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய இந்த போரானது, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்தது.

இதனால் உலக அளவில் பெட்ரோல் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனிடையே, ஈரானை அடிபணிய வைக்கும் நோக்கத்தில் அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ஈரான் அதற்குப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தி வருவதால் உலக அளவில் பதற்ற நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை