Jun 22, 2026
Thisaigal NewsYouTube
3ஆம் உலகப் போர் வெடிக்கும். ஒரு அடி தூரம் தான். அதிபர் தேர்தலில் வென்ற கையோடு புதின் எச்சரிக்கை!
உலகச் செய்திகள்

3ஆம் உலகப் போர் வெடிக்கும். ஒரு அடி தூரம் தான். அதிபர் தேர்தலில் வென்ற கையோடு புதின் எச்சரிக்கை!

Share:

இந்தப் போர் ஆரம்பித்த பிறகு அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அணு ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்ற புதின், இருப்பினும் அணு ஆயுதங்களை உக்ரைன் போரில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் அது மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்ற அவர், அப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போருக்குத் தான் இட்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இதேபோன்ற கருத்தையே கூறி வரும் நிலையில், இப்போது புதினே இந்த கருத்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தேர்தலில் வென்று 5ஆவது முறையாக அதிபராக இது தொடர்பாக புதின் மேலும் கூறுகையில், "ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளின் நேட்டோ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போரில் இருந்து ஒரு படி தொலைவில் தான் இருக்கும்.. இருப்பினும், இது நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது. இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஏனென்றால், நேட்டோ ராணுவ வீரர்கள் ஏற்கனவே உக்ரைனில் இருக்கிறார்கள். போர் தொடர்வது யாருக்கும் நல்லது இல்லை.. அங்கே தொடர்ந்து பல நூறு பேர் உயிரிழந்து வருகிறார்கள். போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், மேற்குலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல தெரியவில்லை.

ரஷ்யச் சிறையில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு நேரடியாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்காத புதின், நவல்னி காலமானார் என்று மட்டும் கூறியிருக்கிறார்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி